செய்திகள்

ஐஎஸ் அமைப்பில் இணையும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 40ற்கும் மேற்பட்ட பெண்கள் பயங்கரவாதநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும்,பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யூலிபிசப் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ள தங்கள் கணவன்மாருடன் இணைவதற்கும் அல்லது இஸ்லாமிய தீவிரவாதிகளை திருமணம் செய்வதற்கும் பெண்கள் சிரியா செல்வது அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல அவுஸ்திரேலிய பிரஜைகள் அந்த அமைப்பில் இணைந்துள்ளதாக தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கிலுள்ள வெளிநாட்டு தீவிரவாதிகளில் ஐந்தில் ஓரு பங்கு பெண்கள்,என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
படுகொலைகளுக்கு அப்பால் பெண்களை எவ்வாறு பாலியல்வல்லுறவிற்குட்படுத்துவது, சித்திவைதை செய்வது என்பது போன்ற அறிவுறுத்தல்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.