செய்திகள்

ஐஎஸ் அமைப்புடன் இணைய லண்டன் மாணவிகள் துருக்கி பயணம்?

லண்டனில் காணாமல்போயுள்ள மூன்று பாடசாலை மாணவிகளும் துருக்கியூடாக சிரியா பயணமாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு லண்டனை சேர்ந்த மூன்று இஸ்லாமிய மாணவிகள் செவ்வாய்கிழமை துருக்கியின் தலைநகரிற்கு சென்றுள்ளனர்.
செவ்வாய்கிழமை அதிகாலை அவர்கள் தங்கள் பெற்றோரிடம்,வெளியில் செல்வதற்கு தெளிவற்ற காரணங்களை தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் துருக்கி எயர்லைன்ஸ் விமானத்தில் பயணமாகியுள்ளனர்.இரு மாணவிகளின் பெயர் விபரங்கள் மாத்திரமே வெளியாகியுள்ளன. மூன்றாவது மாணவியின் பெயர்விபரங்களை வெளியிட வேண்டாமென குடும்பத்தவர்கள் கேட்டுள்ளனர்.
குறிப்பிட்ட மாணவிகள் ஐஎஸ் அமைப்புடன் சேர்வதற்காக சென்றிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாகவும்,மாணவிகள் இன்னமும் துருக்கியில் இருப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

டந்த வருட இறுதியில் சிரியா சென்ற மாணவியின் நெருங்கிய நண்பிக்கள் இவர்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஐஎஸ் அமைப்புடன் இணைவதற்கு மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவது குறித்தும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.ஸ்கொட்லான்ட் யார்ட்பொலிஸார் குறிப்பிட்ட மாணவிகள் குறித்த விபரங்களை கோரியுள்ளனர்.