செய்திகள்

ஐஎஸ் அமைப்பு முற்றாக விரட்டியடிக்கப்படும் என ஓபாமா நம்பிக்கை

ஐஎஸ்அமைப்பினை ஈராக்கிலிருந்து விரட்டியடிக்க முடியும் என தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் நடைபெற்றுவரும் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈராக்கிய ஹைடர் அல் அபாடியை சந்தித்தவேளை இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஈராக்கிலிருந்து ஐஎஸ் அமைப்பினர் முற்றாக விரட்டியடிக்கப்படுவார்களர், அதேவேளை இந்த நடவடிக்கையின் போது அவ்வப்போது பின்னடைவுகளும் ஏற்படலாம் என ஓபாமா தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் அமைப்பினர் ரமாடியில் பெற்றுள்ள வெற்றி குறுகிய காலமே நீடிக்கும் எனவும் ஓபாமா தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறிப்பிட்ட அமைப்பினர் தாம் திருடிய எண்ணெயிலிருந்து இலாபமீட்டுவதை தடுக்குமாறு ஈராக்கிய பிரதமர் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.