செய்திகள்

ஐஎஸ் அமைப்பே எங்களின் முக்கிய எதிரி என்கிறது ரஸ்யா

ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போராடுவதற்காக ஈராக் மற்றும் சிரியாவிற்கு ஆயுதங்களை வழங்கப்போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சேர்கி லவ்ரோவ் இதனை தெரிவித்துள்ளதுடன் ஐஎஸ் அமைப்பு தனது நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐஎஸ் அமைப்பே தற்போது எங்களது முக்கிய எதிரி,ரஷ்ய , ஐரோப்பிய, மற்றும் அமெரிக்க பிரஜைகள் அந்த அபை;புடன் இணைந்து போராடுகின்றனர்.நாட்டிற்கு திரும்பி வரும் அவர்கள் தாக்குதல்களை நடத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
வேறு எந்த நாட்டையும் விட நாங்கள் ஈராக்கிற்கும், சிரியாவிற்கும் அதிகளவு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் உதவி வருகின்றோம்,என அவர் தெரிவித்துள்ளார்.