செய்திகள்

ஐஎஸ் பிடியிலுள்ள முக்கிய நகரை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை ஆரம்பம்

ஐஎஸ் அமைப்பினரின் பிடியிலுள்ள அன்பர் பகுதியை விடுவிப்பதற்கான புதிய நடவடிக்கையை ஈராக்கிய படையினர் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வாரம் திக்கிரித் நகரை ஐஎஸ் அமைப்பின் பிடியிலிருந்து விடுவித்ததன் தொடர்ச்சியாகவே புதிய நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
அன்பர் சுனி இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட நடவடிக்கை ஆரம்பமான பின்னர் அன்பரின் தலைநகரமான ரமாடியிலிருந்து கிழக்காக உள்ள நகரமொன்றை ஐஎஸ் அமைப்பினரின் பிடியிலிருந்து விடுவித்துள்ளதாக ஈராக்கிய படையினர் தெரிவித்துள்ளனர்.
அரசபடையினர் மீது மோட்டார் தாக்குதலை மேற்கொண்டவாறே சிஜாரியா நகரிலிருந்து ஐஎஸ் அமைப்பினர் வெளியேறிவருகின்றனர்.
அருகிலுள்ள ஹபானியா விமானத்தளத்திற்கான விநியோக பாதையை கைப்பற்றுவதும்,ராமடியையும்,பலுஜாவையும் இணைக்கும் பாதையை ஐஎஸ் அமைப்பினரிடமிருந்து மீட்பதுமே சிஜாரியா நகரை கைப்பற்றுவதற்கான நோக்கம் என அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர்.