செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி பிளவடைந்தமைக்கு ஹக்கீமே பொறுப்புக் கூற வேண்டும் என்கிறார் ருவான்

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவடைந்து இந்த நிலைமைக்கு தள்ளப்படுவதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமே காரணமானவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவுக்கு ரவூப் ஹக்கீமே பொறுப்புக் கூற வேண்டும். அவரே சஜித் தரப்பினரை இழுத்துச் சென்றுள்ளார். தற்போது அவர்களின் அணியினர் அரசாங்கத்தின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். -(3)