செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியே திருடர்களை பாதுகாக்கின்றது : எதிர்க் கட்சி தலைவர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி திருடர்களை பாதுகாக்கவில்லை ஐக்கிய தேசிய கட்சியே திருடர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பாகவும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான முறையற்ற விசாரணைகள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் குழப்பநிலையொன்று ஏற்பட்டிருந்த நிலையில் திருடர்களை நாம் பாதுகாப்பதாக எங்களை பார்த்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அப்படி நாம் பாதுகாக்கவில்லை ரணில் விக்கிரமசிங்கவே அவர்களை பாதுகாக்கின்றார்.
நாம் எந்தவொரு நபர் மீதான விசாரணைக்கும் எதிர்ப்பில்லை ஆனால் முறையற்ற விசாரணைகளுக்கே எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். இதேவேளை மத்திய வங்கி ஆளுனரான அர்ஜூனா மகேந்திரன் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியி உறுப்பினர்களே விசாரணை குழுவுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்படியென்றால் திருடர்களை பாதுகாப்பது ஐக்கிய தேசிய கட்சியே என்பது உறுதியாகின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.