செய்திகள்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை பொதுமக்களை பாதுகாக்க தவறிவிட்டதாக மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை பொதுமக்களை பாதுகாக்க தவறிவிட்டதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன் வருடாந்த அறிக்கையிலேயே இது குறித்து தெரிவித்துள்ள மன்னிப்புசபை வீட்டோ அதிகாரத்தை கொண்டுள்ள ஐந்து நாடுகளும் பொதுமக்களை பாதகாப்பதற்கு அதனை பயன்படுத்துவதற்கு பதில்;, தமது புவிசார் அரசியல் நலனுக்கு ஏற்பவும், தமது சுய அரசியல் இலாபத்தின் அடிப்படையிலும் வீட்டோவை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
பாரிய படுகொலைகள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பான விடயங்களின் போது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாமலிருப்தே இதற்கான ஓரே வழிஎனவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இரண்டு தடவைகள் மாத்திரமே பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.கிரிமியா மீதான சட்டவிரோத சர்வஜனவாக்கெடுப்பை கண்டிக்கும் தீர்மானத்தை ரஸ்சியா வீட்டோவை பயன்படுத்தி தடுத்த அதேவேளை சிரியாவிற்கு எதிரான தீர்மானத்தை சீனாவும் ரஸ்சியாவும் வீட்டோவை பயன்படுத்தி தடுத்திருந்தன.
உலக நாடுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பான பல தீர்மானங்கள் வீட்டோ செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக முழுமை பெறாமல் போனதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீட்டோ அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்தியிருந்தால் சிரியாவில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பாக ஐ.நா நடவடிக்கை எடுப்பது தடுத்து நிறுத்தப்பட்டிராது,சிரியா ஜனாதிபதி பசார் அல் அசாட் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டிருப்பார், என மன்னிப்புச்சபை டிக்காட்டியுள்ளது.இதேவேளை சர்வதேச நெருக்கடிகள் பலவற்றிற்கு உலகநாடுகள் 2014 இல் பதிலளித்தவிதம் வெட்கக்கேடானது என்றும் குறிப்பிட்டுள்ள மன்னிப்புசபை அகதிகளை பொறுப்பேற்பதற்கு செல்;வந்த நாடுகள் மறுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.2015 இலிலும் நிலைமை நம்பிக்கை அளிக்ககூடியதாகயில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.