செய்திகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் மனதை மாற்றுவதற்கு புதிய அரசாங்கம் தீவிர முயற்சி

இவ்வருடம் மார்ச் மாத அமர்விற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கைகுறித்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு முயல்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரதிவெளிவிவகார அமைச்சர் அஜித்பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை குறித்தவிசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்டவுள்ளதால் மார்ச் மாத அமர்வு எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இலங்கையின் மூத்த இராஜதந்திரிகள் சிலரிடம்இது தொடர்பான ஆலோசனைகளை பெற்றுள்ளது,இலங்கை தொடர்பான எதிர்மறையான நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மனிதஉரிமை கவுன்சிலை கேட்டுக்கொள்ள முயல்கிறோம்,
மார்ச் அமர்வு எமது நாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, அது சவாலானதாக அமையப்பபோகின்றது,ஐ.நாவின் மனித உரிமை கரிசனைகளுக்கு தீர்வை காண்பதற்காக இலங்கை தனது புதிய திட்டமொன்றை சமர்ப்பிக்கவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.