செய்திகள்

ஐதேகவின் அழுத்தத்துக்குள் ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் அழுத்த்ததுக்குள் இருக்கிறார் என ஸ்ரீலங்கா சுத்தந்திரக் கட்சியின் நிரந்தர உறுப்பினரும், மத்திய தெரிவுக்குழுவின் உறுப்பினருமான குருணாகல் மாவட்ட எம்பி சாலிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த கூட்டமொன்றில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

அண்மையில் கூடிய சுத்தந்திரக் கட்சி செயற்குழு கூட்டத்தில் மீண்டும் அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு கட்சியின் செயலாளர் பதவி வழங்கிய விடயம் தவறானது. அனுராவை விட நான் அனுபவமிக்கவன்.

இப்படியாக பல பதவிகள் அனுபவமில்லாத உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஐதேகவின் அழுத்ததுக்குள் இருப்பதால் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார் என அவர் சுட்டிக்காட்டினார்.