செய்திகள்

ஐந்து கேட்ச் ஒரு ஸ்டம்பிங் செய்து இலங்கை விக்கெட் கீப்பர் தினேஷ் சந்திமால் சாதனை

இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியின் பாகிஸ்தான் தனது 2-வது இன்னிங்சில் 329 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் சந்திமால் ஐந்து கேட்ச் மற்றும் ஒரு ஸ்டம்பிங் மூலம் ஆறு பேரை ஆட்டமிழக்கச்செய்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் இந்திய விக்கெட் காப்பாளர் கிர்மானி 1976-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து கேட்ச் மற்றும் ஒரு ஸ்டம்பிங் மூலம் ஆறு பேரை ஆட்டமிழக்கச்செய்தார்.
அதன்பின் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒரு விக்கெட் காப்பாளர் முதலில் துடுப்பபெடுத்தாடிய அணியின் 2-வது இன்னிங்ஸ் ஆட்டத்தின் போது இந்த சாதனையை செய்துள்ளார்.

சந்திமால் அஹ்மத் ஷேசாத் யூனிஸ்கான் ஆசாத் ஷாபிக் சர்பிராஷ் அஹ்மது ஜூனைத் கான் ஆகியோரை கேட்ச் செய்தும் சதம் அடித்த அசார் அலியை ஸ்டம்பிங் செய்தும் அவுட் ஆக்கினார்.