செய்திகள்

ஐந்து கோடி ரூபாவை வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்டவேளையில் சுங்கப் பிரிவினரால் பறிமுதல்

இலங்கையிலிருந்து 5 கோடி ரூபா பெறுமதியான பல்வேறு நாடுகளின் பணத்தாள்களை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளிநாட்டுக்குக் பயணியொருவர் கடத்த முயன்ற போது சுங்கப்பிரிவினர் வியாழக்கிழமை அதிகாலை கைப்பற்றினர்.

இந்தப் பணத்தாள்களை குறிப்பிட்ட பயணி தன்னுடைய பயணப்பையில் மறைத்து வைத்துக் கொண்டு டுபாய் ஊடாக கட்டாருக்கு செல்வதற்கு முயன்றபோதே அவருடைய பயணப்பையிலிருந்து இந்தப் பணம் மீட்கப்டப்டுள்ளதாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான நபர் என்றும் அவரைக் கைது செய்துள்ளதாகவும் சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அவருடைய பயணப்பையிலிருந்து குவைத் டினார் 950, ஜப்பானிய யென் 110000, கட்டார் ரியால் 48500, சவ+தி ரியால் 802,000 அமெரிக்க டொலர் 72000, ய+ரோ 450, பிரித்தானிய பவுண் 30000 ஐக்கிய அரசு இராச்சியத்தின் டிரம் 33500 பெறுமதியான பணத்தாள்களே மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் டுபாய் ஊடாக கட்டாருக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தபோதே நேற்று முன் தினம் அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.