செய்திகள்

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் செயற்பாட்டை ஆரம்பிக்க கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானம்

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் செயற்பாட்டை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்க இலங்கை கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இரு வேறு சுற்று நிருபங்களில் பூரண தெளிவில்லாமை உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி கிராம உத்தியோகத்தர்களும் சில தொழிற்சங்கங்களை சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர்களும் நேற்று முன்தினம் முதல் கடமையில் இருந்து விலகியிருந்தனர்.இந்த நிலையில் 5,000 ரூபா கொடுப்பனவை இன்று முதல் விநியோகிக்க இணக்கம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.இந்நிலையில் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக நேற்று முதல் மீண்டும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.(15)