செய்திகள்

ஐரோப்பா உசார் நிலையில்

தேடுதல்நடவடிக்கைகளில் இஸ்லாமிய தீவிரவாதிகள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதை ஐரோப்பா முழுவதும் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம், பிரன்ஸ்,பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் இஸ்லாமிய தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 20 மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பெல்ஜியத்தில் வியாழக்கிழமை ஆரம்பமான நடவடிக்கையை தொடர்ந்து 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், இவர்கள் மீது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஆயுதங்கள், வெடிபொருட்கள்,வெடிமருந்துகள்,சீருடைகள் பெருந்தொகை பணம் ஆகியவற்றை மீட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள்,இந்த நபர்கள் வீதிகளிலும், பொலிஸ் நிலையங்களிலும் பல பொலிஸாரை சுட்டுக்கொல்வதற்கு திட்டமிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
பிரான்சிலுள்ள இரு நபர்களை நாடு கடத்துமாறு கோரவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத சந்தேக நபர்களை கையாள்வதற்காக புதிய சட்டங்களையும் அந்த நாடு அறிவித்துள்ளது.

இதேவளை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்களை தொடர்ந்து ஸ்பெயின், ஜேர்மனி ஆகிய நாடுகளும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.