செய்திகள்

ஐக்கிய இராச்சியம் வாழ் யாழ் குருநகர் மக்களின் ஒன்று கூடல்

ஐக்கிய இராச்சியம் வாழ் யாழ் குருநகர் மக்களின் ஒன்று கூடல் பெப்ரவரி 28ம் திகதி நடைபெற்றது. புலம்பெயர் சூழலில் பரவி வாழும் ஊர் மக்களை ஒன்று கூட்டி தமது ஊர்க்கால கதைக்கள் பேசவும்இ  ஒற்றுமையை வலுப்படுத்தவும் எதிர்கால சந்ததியினருக்கு தமது பண்பாட்டு பாரம்பரியங்களை பகிரும் நோக்கோடு இந்த ஒன்று கூடலுக்குக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=lDscgeBtKao&feature=youtu.be” width=”500″ height=”300″]

ஸ்ரான்மோரில் அமைந்துள்ள Bentley Wood high School கலையரங்கில் இந்த ஒன்று கூடல் நிகழ்வுகள் இடம்பெற்றன. சிறுவர்களின் நடன நிகழ்ச்சிகள்இ தாய்மாரின் கலைநிகழ்வுகள்  குருநகர்  மண்ணின் முக்கியமான எழுத்தழரான மு.புஸ்பராஜன் மற்றும் பலரின் பேச்சுகள் என பல்சுவை கலைநிகழ்சிகள் இடம்பெற்றன. ஐக்கியராச்சிய குருநகரைக் சேர்ந்த இளையோர்கள் நடனக் குழுவான Rising Star குழுவினரின் நடனம் பலரினதும் பாராட்டைப் பெற்றது.  மு.புஸ்பராஜன் அவர்கள் ஊர் மக்களpன் ஒன்றுபடுதலின் அவசியத்தையும் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளையும் பற்றி தனது உரையில் கூறினார்.

ஒன்றுகூடலும், இராப்போசன விருந்தும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அரங்கம் நிறைந்த விழாவில் திரு. செபஸ்ரியன் அவர்கள்   நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.