செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சு ஆச்சரியம்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு ஆச்சரியம் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் உள்விவகாரம் ஒன்று தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை விடுத்துள்ளமை ஆச்சரியமளிப்பதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, இவ்வாறான அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டிற்கான நோக்கம் மற்றும் பக்கச்சார்பு குறித்து கேள்வியை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு தேர்தல் குறித்து வெளிநாடுகள் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அறிவுரைகளை வெளியிட முடியாது என்றும் இலங்கை குறிப்பிட்டுள்ளது.