செய்திகள்

ஐ.எஸ். இயக்கத்தை அழிக்க கைகோர்க்கும் ஈரான் , அவுஸ்திரேலியா

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிவிரவாதிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியாவினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவினையும் வழங்குவதற்கு தாம் தயாராகவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதன் முக்கிய கட்டமாக புலனாய்வுத் தகவல்களை அவுஸ்திரேலியாவுடன் பரிமாறிக்கொள்ள ஈரான் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வரவேற்றுள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப், இதன்மூலம் இரு நாடுகளும் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக காத்திரமான எதிர்நடவடிக்கைகளை மேற்;கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கான தமது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர், ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரவுஹானியை சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தநிலையில், சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 100 அவுஸ்திரேலிய துடுப்பினர் அங்கு சென்றுள்ளனர்.
இதனிடையே, அவுஸ்திரேலிய மண்ணில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவினை தெரிவிக்கும் சில குழுக்கள் குறித்தும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படைத்தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக முதலாவது உலகப் போர் நிறைவடைந்து 100 வருட நிகழ்வை ஒட்டி இடம்பெற்ற நினைவு விழாவினை தாக்க முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 5 இளைஞர்கள் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.