செய்திகள்

ஐ.எஸ் இயக்கத்தை இலங்கையில் தடைசெய்யுமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை

ஐ.எஸ் இயக்கத்தை இலங்கையில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக பிரகடனப்படுத்துமாறு பௌத்த அமைப்பொன்றினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
”ஹெல பொது சவிய” என்ற அமைப்பொன்றினாலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக அந்த அமைப்பினால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையை ஆசியாவில் பாதுகாப்பான நாடாக மாற்றியமைக்க வேண்டும். இதன்படி ஐ.எஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதற்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட வேண்டும். என அந்த கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜினவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
தமது இயக்கத்தினருக்கு எதிராக செயற்படும் நாடுகள் மற்றும் நபர்களுக்கு எதிர்காலத்தில் இருண்ட நாட்கள் உருவாகும் என ஐ.எஸ் அமைப்பினரால் அண்மையில் எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
n10