செய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 10,000 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 10 ஆயிரம் கணக்குகள் ஒரே நாளில் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் தெரிவித்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களது இயக்கத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆட்களை சேர்த்து வருகின்றனர்.

இதற்கு சமூக வலைதளங்களை பயன்படுத்திய அவர்கள், தாங்கள் அரங்கேற்றிய அனைத்து கொடூர சம்பவங்களையும் டுவிட்டரிலே வெளியிட்டனர்.

அதனைத்தொடர்ந்து, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய கணக்குகளை ட்விட்டர் தொடர்ந்து முடக்கி வருகிறது.

இதன் படி, கடந்த ஏப்ரல்-2ம் தேதி, மிகவும் கொடூரமான எச்சரிக்கைகளை ட்விட் செய்த சுமார் 10 ஆயிரம் வரையிலான கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் மட்டும் வாரத்திற்கு சுமார் 2 ஆயிரம் ஐ.எஸ். தொடர்பு ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.