செய்திகள்

ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி இறந்துப் போனதாக ஈரான் வானொலி அறிவிப்பு

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தலைவரான அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்ட்டுவிட்டதாக ஈரான் வானொலி அறிவித்துள்ளது.
வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அப்பகுதி முழுவதையும் ஒன்றிணைத்து ஐ.எஸ்.ஐ.எஸ்.-இ
ன் ஆட்சிக்கு உட்பட்ட தனிநாடாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஓர் அறிக்கையை வெளியிட்ட அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி வடக்கு சிரியாவில் இருந்து ஈராக்கின் டியாலா மாகாணம் வரை உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் இந்நிலப்பரப்பின் ‘கலிபா’வாக (மன்னர்) ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபு பக்ர் அல் பக்தாதி விளங்குவார் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மேற்கு ஈராக் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை குறிவைத்து அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியன. இந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தலைவர் அபு பகர் அல்– பக்தாதி படுகாயம் அடைந்தார் என்றும் உயிருக்கு போராடும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
அதைத் தொடர்ந்து ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தை வழிநடத்த தற்போது தற்காலிகமாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டதாகவும் அவரது பெயர் அபு அலா அப்ரி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு வேளை அமெரிக்க தாக்குதலில் படுகாயமடைந்த அல் பக்தாதி இறந்து விட்டால் தற்போது தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அப்ரி தொடர்ந்து தலைவராக இருப்பார் என்ற தகவலும் வெளியானது.