செய்திகள்

ஐ.எஸ் மீது இலங்கையில் தடையில்லாமையினால் அது தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளுக்கு சிக்கல்

இலங்கையில் 6 பிரதேசங்களில் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புகளை கொண்டுள்ள பலர் இருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் அந்த இயக்கத்திற்கு இலங்கையில் இன்னும் தடை விதிக்கப்படாதிருப்பதால் அவர்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்கவும் மற்றும் அவர்களை கைது செய்யவதற்கும் புலனாய்வு பிரிவினருக்கு முடியாதிருப்பதாக சிங்கள பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பெல்ஜியத்தில் விமான நிலையமொன்றில் இடம்பெற்ற ஐ.எஸ் இயக்கத்தின் தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நாடுகள் பலவற்றுக்கு அந்த இயக்கத்தினால் அச்சுறுத்தல் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இலங்கையில் விமான நிலையத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டதுடன் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது. எவ்வாறாயினும் இலங்கைக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது எனவும் இருப்பினும் பாதுகாப்பு பிரிவினர் 24 மணி நேரமும் கண்கானிப்புடனேயே இருப்பதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

சிரியா எல்லைப் பகுதியில் ஐ.எஸ் இயக்கம் மீதான விமானத் தாக்குதலொன்றில் கலேவல பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்ததை தொடர்ந்து ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய பலர் இலங்கையில் இருப்பது தெரிய வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

N5