செய்திகள்

ஐ. தே .க உட்பட பல அமைச்சர்கள் விரைவில் ராஜிநாமா: தினேஷ் குணவர்தன

கடந்த வியாழக்கிழமை 4 அமைச்சர்கள் ராஜினாமா செய்ததை அடுத்து மேலும் பல அமைச்சர்கள் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் இவர்களில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் அடங்குவர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பல ஐ. தே . க அமைச்சர்களுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அரசாங்கத்தில் அதிருப்தி கொண்டுள்ள அவர்கள் அரசுக்கெதிரான பொது சக்தி ஒன்றை கட்டி எழுப்புவதற்கு உதவுவர் என்றும் அவர் தெரிவித்தார்.