செய்திகள்

ஐ.தே.க. தனியாகவே களம் இறங்கும்: செயற்குழுக் கூட்டத்தில் முடிவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் தலைவர் தலைமையில் கூடிய செயற்குழுவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதேவேளை, தேர்தல் தொடர்பிலான முடிவுகள் மற்றும் வேட்புமனு குழுவை நியமிப்பதற்கான அதிகாரங்களை கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கு கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.