செய்திகள்

ஐ.நா அமைதிப்படையில் இலங்கை படையினருக்கு அதிக வாய்ப்பு

இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஐ.நா அமைதிப்படையில் இலங்கைப் படையினருக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி தென்சூடானில் பணியாற்றும் ஐ.நா.அமைதிப்படையில் விமானப்படையின் ஹெலிகொப்டர் அணியொன்று இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.

மூன்று எம்.ஐ.17ஹலிகொப்டர்களுடன் 18 அதிகாரிகள் உள்ளிட்ட 104 விமானப் படையினர் இதற்காக தென்சூடான் செல்லவுள்ளனர். அடுத்தமாதம் தொடக்கம் இவர்கள் அங்கு அமைதி காப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

ஏற்கனவே இலங்கை விமானப்படையின் அணியொன்று மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நா.அமைதிப்படையுடன் இணைந்து பணியாற்றுகிறது. இந்த நிலையிலேயே தென்சூடானுக்கு அடுத்த அணி அனுப்பி வைக்கப்படவுள்ளது.