செய்திகள்

ஐ.நா. அறிக்கை வரும்போதே தீர்வுக்கான கதவுகள் திறக்கப்படும்: சுரேஷ் பிரேமச்சநதிரன்

சர்­வ­தேச விசா­ரணை அறிக்­கைகள் வெளி­வ­ரு­கின்ற போது தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­கான கத­வுகள் திறக்­கப்­ப­டலாம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

திருக்­கோவில் பிர­தே­சத்தில் தம்­பி­லுவில் பகு­தியில் ஈழ மக்கள் புரட்சி கர விடு­தலை முன்­ன­ணியின் மாவட்ட காரி­யா­ல­யத்­தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

“ஐ.நா. சபையின் அறிக்கை இன்னும் வெளி­வ­ர­வில்லை. இது வெளி­வ­ரு­கின்ற போதுதான் பல விட­யங்கள் வெளி­வரும். அதா­வது ஏன் இலங்­கையில் யுத்தம் தொடங்­கி­யது? இந்த யுத்­தத்தின் காரணகாரி­யங்கள் என்ன? இந்த யுத்­தத்தால் எவ்வளவு அழி­வுகள் ஏற்­பட்­டுள்­ளன? இந்த நாட்டில் மேலும் ஒரு யுத்தம் வராமல் இருக்க வேண்­டு­மென்றால் இலங்கை அர­சாங்கம் எவ் வித­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என பல விட­யங்கள் இந்த விசா­ரணை அறிக்­கையில் வெளி­வ­ரலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஆகவே இந்த ஐ.நா. சபையின் விசா­ரணை அறிக்­கைகள் என்­பது மிக முக்­கி­ய­மா­னது. இந்த அறிக்­கைக்கு பதி­லீ­டாக இலங்கை அர­சாங்கம் தாம் இந்த அறிக்­கை­களை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என தெரி­வித்து வந்த நிலையில் தற்­போது ஆட்­சிக்கு வந்­துள்ள புதிய அர­சாங்­கமும் அந்த அறிக்­கையை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என தெரி­வித்­துள்­ளது.

இதற்கு பதி­லாக இலங்கை அர­சாங்கம் உள்­நாட்டில் விசா­ர­ணைகள் நடத்­து­மானால் அது ஒரு நம்­பத்­த­குந்த விசா­ர­ணை­யாக இருக்­காது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ் விசா­ர­ணைகள் கால நேரத்தை கடத்­து­வ­தற்­காக உல­கத்தை ஏமாற்­று­வ­தற்­காக தமிழ் மக்­களை ஏமாற்­று­வ­தற்­காக இந்த உள்­ளக விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­லாமே தவிர தமிழ் மக்­க­ளுக்கு தீர்வை பெற்­றுக்­கொ­டுக்கும் என்­பதில் நம்­பிக்கை இல்லை.

காணாமல் போன­வர்கள் சம்­பந்­த­மாக மட்­டக்­க­ளப்பில் ஒரு குழு விசா­ரணை மேற்கொண்டுள்ளது. அம்­பா­றைக்கு வர­யி­ருக்­கின்­றார்கள். முல்­லைத்­தீவு கிளி­நொச்சி யாழ்ப்­பாணம் போன்ற இடங்­களில் விசா­ர­ணைகள் செய்­துள்­ளார்கள். இது சம்­பந்­த­மான இடைக்­கால அறிக்கை ஒன்று வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஆனால் இன்று சுமார் 20 ஆயிரம் பேருக்கு மேல் காணாமல் போயுள்­ள­தாக மனு கொடுக்­கப்­பட்­டி­ருந்தும் இது­வரை ஒரு­வரும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. இதற்கு பதி­லாக இந்த குழு மரண சான்­றிதழ் கொடுக்­கின் ­றது. எனவே இது போன்று தான் யுத்த குற்ற உள்­ளக விசா­ர­ணை­களை அரசாங்கம் நடத்தி னாலும் அதுவும் இவ்வாறான குழுவாகத் தான் இருக்கும் என்பதுதான் உண்மையான விடமாகும். எனவே ஐ.நா. சபையின் சர்வதேச விசாரணை அறிக்கைகள் வெளிவருகின்ற போது தமிழ் மக்களின் இனப்பிரச் சினை தீர்வுக்கான கதவுகள் திறக்கப்படலாம் என்றார்.