செய்திகள்

ஐ.நா உயர் பிரதிநிதி யாழ் செல்கிறார்

இலங்கைக்கு நாளை வருகைதரவுள்ள ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உயர் அதிகாரியான ஜெப்ரி பெல்ட்மன் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்வார் என தெரியவருகின்றது.

ஜெப்ரி பெல்ட்மன், யாழ்ப்பாணமும், செல்வார் என்று, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐ.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று நடத்தப்பட்டதன் பின்னணியில், ஐ.நா உயர் அதிகாரியின் யாழ்ப்பாண பயணம் இடம்பெறவுள்ளது.

இதற்கிடையே, நாளை கொழும்பு வரும், ஜெப்ரி பெல்ட்மன், நாளை காலை 11.30 மணியளவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.