செய்திகள்

ஐ.நா. போர்க் குற்ற அறிக்கையில் ஆச்சரியங்கள் காத்துள்ளன: எரிக் சொல்ஹெய்ம்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கை ஆச்சரியங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று ஆணையாளர் தன்னிடம் உறுதியளித்ததாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான மேற்படி அறிக்கை, எதிர்வரும் செப்டெம்பரில் வெளியாவது உறுதி என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் – ஹசைன் தன்னிடம் உறுதியளித்ததாக எரிக் சொல்ஹெய்ம், தனது ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த அறிக்கை பல ஆச்சரியங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டார் என்றும் அந்த டுவிட்டர் பதிவில் எரிக் சொல்ஹெய்ம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.