செய்திகள்

ஐ.நா. விசாரணையாளர்கள் இலங்கைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்: ராஜித சேனாரட்ன

புதிய அரசாங்கம் ஐ. நா. போர்குற்ற விசாரணையாளர்களை இலங்கைக்குள் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் ஆனால் தாம் மேற்கொள்ளும் உள்ளக விசாரணை சர்வதேச தரத்தில் அமையும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற வெளிநாட்டு செய்தியாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தேவைப்பட்டால் தமது உள்ளக விசாரணைக்கு வெளிநாட்டு நிபுணர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.