செய்திகள்

ஐ.நா. விசாரணை அறிக்கை பின்போடப்படுகின்றது: இலங்கையின் முயற்சிக்கு வெற்றி

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை வெளியிடுவதை பின்போட வேண்டும் என இலங்கை மேற்கொண்ட முயற்சி வெற்றிபெற்றிருப்பதாக ஜெனீவாவிலிருந்து வெளியாகியுள்ள ராய்டர் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

மார்ச் இறுதிப்பகுதியில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இந்த அறிக்கை வெளியிடப்படவிருந்தது. இருந்த போதிலும், அரசாங்கம் உள்ளக விசாரணைகளை முன்னெடுக்க காவ அவகாசம் வேண்டும் என்பதால் இதனை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டிருநதது.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு ஆணையாளர் செயித் அல் ஹசேன் இன்று அனுப்பிவைத்துள்ள கடிதம் ஒன்றி இந்த அறிக்கை வெளியிப்படுவதை செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடருக்கு ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டிருப்பதாக ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் உயர் குழுவே இது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் என்ற போதிலும், ஆணையாளரின் நிலைப்பாடு இதில் பெரியளவில் செல்வாக்கைச் செலுத்துவதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.