செய்திகள்

ஐ.நா விசாரணை அறிக்கை மார்ச்சில் வெளிவரவேண்டும் என்று வலியுறுத்தி யாழில் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு

இலங்கை மீதான ஐ.நா விசாரணை அறிக்கையிணை மார்ச்சில் வெயளியிடாமல் காலதாமதமாக வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், ஏற்கனவே திட்டமிட்டதன் அடிப்ப டையில் மார்ச் மாதமே கொண்டு வரப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு ஈழத் தமிழினத்திற்கு நீதி வேண்டி யாழில் மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினர்களையும் கலந்து கொண்டு தமிழினத்தின் நியாயமான கோரிக்கை குரலை ஐ.நாவிற்கு ஒலிக்க செய்ய வேண்டுமென்று மேற்படி சங்கத்தின் தலைவர். ஆர்.இராசகுமாரன் தெரிவித்துள்ளார்.

தமிழினத்திற்கு நீதி வேண்டி நடைபெறுகின்ற இந்தப் போராட்டம் தொடர்பில் ஆசிரியர் சங்கத்திற்கும் யாழிலுள்ள பொது அமைப்புகளிற்கும் இடையில் இன்று  காலை யாழ் பல்கைலக்கழக பொது நூலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இராசகுமாரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது.

இலங்கை அரசினால் ஈழ தேசத்தில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள், அநீதிகளுக்கு தமிழ் மக்கள் நீதி வேண்டி நிற்கின்றனர். இதற்கு இலங்கை அரசின் உள்ளக விசாரணைகளிலோ அல்லது பேச்சுக்களிலோ எந்த நம்பிக்கையும் இல்லாத நிலை காரணத்தால் சர்வதேசத்தையே தமிழ் மக்கள் நம்பியிருக்கின்றனர்.

இதனடிப்படையில் சர்வதேச விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கை வெளியிடப்படுமென்றும் அதனடிப்படையில் நீதி கிடைக்குமெனவும் ஒட்டுமொத்த தமிழினமும் எதிர்பார்த்து காத்திருந்தது.

ஆனால் அந்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக திடிரென அறிவிக்கப்பட்டுள்ளமை மிகுந்த ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் ஏற்கனவே திட்டமிட்டதன் அடிப்படையில் மார்ச் மாதமே கொண்டு வரப்பட வேண்டுமென்றும் கோருகின்றோம்.

இந்நிலையில் சர்வதேசத்தின் நோக்கம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுப்பதா? பூகோள அரசியல் நகர்வுகளின் அடிப்படையில் இங்கு தமது நலன்களை முன்னிலைப்படுத்திச் செயற்படுவதற்கு ஆட்சி மாற்றம் தானா என்று நோக்கும் போது மாற்றத்தை தான் விரும்பியிருப்பது தெளிவாகப் புரிகின்றது.

இதனால் நாம் எமது நியாயமான கோரிக்கைகளிலிருந்து பின்வாங்காது எமது கொள்கை நோக்கத்தில் உறுதியாகச் செயற்பட வேண்டும். இந்த அறிக்கையானது மார்ச்சிலேயே கொண்டு வரப்பட வேண்டுமென்று புலம் பெயர் மற்றுமு; தமிழக உறவுகள் செயற்படுகின்ற போது ஈழத்திலிருந்து நாமும் செய்றபட வேண்டியது அசவசியாகவே உள்ளது.

இவ்வாறு தமிழினத்திற்கு ஆதரவாக கடந்த காலங்களில் செயப்பட முடியாமல் இருந்தது. இருந்தும் செயற்பட்டால் புலி முத்திரையும் குத்தப்பட்டது. ஆனால் தற்போதும் ஈழத் தமிழினத்திற்காகச் செயற்பட வேண்டி ஏற்பட்டுள்ளது. இதற்கமைய ஐநா அறிக்கை nவியிடப்பட வேண்டுமென்று பாரியதொரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

இதற்கமைய எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 9 மணிக்கு யாழ் பல்கலைக்ககழத்தில் ஆரம்பிக்கப்பட்டு யாழ் நல்லூரிலுள்ள ஐ.நா அலுவலகம் வரை பேரணியாகச் சென்று எமது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மகஐரொன்றையும் கையளிக்கவுள்ளோம் என இராசகுமாரன் மேலும் தெரிவித்தார்.