செய்திகள்

விசாரனைக்கு எதிரான இரு வேட்பாளர்களினதும் கருத்துக்களை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ளவேண்டும்: உலக தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை

இலங்கையில் இரு பிரதான சிங்கள தேர்தல் வேட்பாளர்களும் ஐ.நா விசாரனைக்கு எதிராக தெரிவித்துள்ள பிரகடனங்களை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று 63 உலக தமிழ் அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இரு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்காக எந்த ஒரு அரசியல் தீர்வினையும் முன்வைக்கவில்லை என்றும் சிங்கள இனத்தின் நிரந்தர ‘பெரும்பான்மை போக்கை ‘ நிலைநிறுத்தி தமிழ் மக்களை வலுவலுவற்றவர்களாக்கி ஓரம்கட்ட முனைந்துள்ளதாகவும் இந்த அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

அவர்கள் விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

புத்தாண்டு தினமாகிய சனவரி 01, 2015 நாளில், இலங்கைத்தீவில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட வடகிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த தமிழ்த்தேசத்தின் நமது உடன்பிறந்த தமிழ் உறவுகளுக்கு சுயமாண்பு, சுதந்திரம், நீதி, நிலையான அமைதி கிடைக்க ஒன்றுபட்டு உழைப்போமென்று உலகளாவிய தமிழ் உருவாக்கங்கள் சார்பாக மீண்டும் எமது உறுதிப்பாட்டை வழங்குகிறோம். மாறிமாறி வரும் சிறிலங்கா அரசுகளால் ஒடுக்கப்பட்டு நிற்கும் எமது மக்களின் விடுதலைக்கான வேணவாவிலும் நாம் ஒருமைப்பட்டுள்ளோம்.

தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்பான குற்றங்கள் மட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைக்கு அடிகோலிய மார்ச் 2௦14 தீர்மானத்தை வழிநடத்தியும், ஆதரவுதந்தும் உதவிய அனைத்துலக சமூகத்திற்கு எமது நன்றிகள்.

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தால் முன்எடுக்கப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பான இந்தப் பன்னாட்டு விசாரணையானது, தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புரைப்பதோடு, பரிகார நீதிக்கும் வழிவகுக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

சனவரி 8 இல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் சிங்களத் தலைவர்கள் ஈடுபட்டுள்ள இவ்வேளையில், இரு பிரதான சிங்களத் தலைவர்களும் ஐநா விசாரணைக்கு எதிராகப் புனைந்துள்ள எதேச்சாதிகாரமான பிரகடனங்களை அனைத்துலக சமூகம் கவனத்திற் கொள்ளவேண்டும். குறிப்பாக, தமிழருக்கான அரசியற்தீர்வு எதனையும் எந்தத் தரப்பும் முன்வைக்கவில்லை.

சிங்கள மேலாண்மை சார்ந்த சிறிலங்கா அரசியல் வரலாற்றுக்கு அமைவாக, இரு வேட்பாளர்களுமே சிங்கள இனத்தின் “நிரந்தர பெரும்பான்மை”ப் போக்கை நிலைநிறுத்தி அதன்மூலம் தமிழர்களின் வலுநீர்த்து அவர்களை ஓரங்கட்ட முனைந்துள்ளனர். அரசாங்கத்தை மாற்றுவதால் மட்டுமன்றி, அரசின் அடிக்கட்டமைப்பையே மாற்றுவதன் மூலமே உண்மையான மக்களாட்சியையும், நிரந்தரமான அமைதியையும் இந்தத் தீவிலே ஏற்படுத்தமுடியுமென்று நாங்கள் நம்புகிறோம்.

மே 2009 போர் முடிவுற்றதிலிருந்து, சிறிலங்கா அரசானது தமிழ்த்தேசத்தைத் துரிதகதியில் அழித்தொழிக்கத் தலைப்பட்டுள்ளது. வலிந்து திணிக்கப்படும் குடியியற் பரம்பல் மாற்றங்கள், தமிழருக்குச் சொந்தமான நிலங்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், மதச் சடங்குகளைக் குழப்பி வழிபாட்டுத் தலங்களையும் அழித்தல், பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்குதல், தொடரும் கொடுவதைகள், காணாமற் போதல்கள், மூச்சடைக்கும் இராணுவ ஆக்கிரமிப்பு என்பனவாக இனப்படுகொலை இன்னும் நீட்டிக்கப் பட்டுக்கொண்டே இருக்கிறது.

இந்தப் புறச்சூழலில், சிறிலங்காவின் இனஅழிப்பு நடவடிக்கையிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு உரிய இடைக்காலப் பொறிமுறை ஒன்றை உடனடியாக ஏற்படுத்துமாறு அனைத்துலக சமூகத்தைக் கோரி நிற்கிறோம். மேலும், தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை முன்னெடுத்து ஒரு பொதுவாக்கெடுப்பின் மூலம் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கச் சாதகமான சூழலை ஏற்படுத்துமாறும் வேண்டுகின்றோம்.

இந்த மங்களகரமான புத்தாண்டு நன்நாளில், நீதியும், சமத்துவமும், சுதந்திரமும் தழைத்தோங்கும் அமைதி நிறைந்த உலகை நாம் வேண்டி நிற்கிறோம்.

இந்த புத்தாண்டு செய்தியை ஒருங்கிணைந்தது வெளியிட்டுள்ள அமைப்புக்களின் விபரங்கள்,

1. Academy of Tamil Studies, Malaysia
2. Akila Inthiya Tamilar Katchi, Tamil Nadu, India
3. Anti Methane Project Federation – Tamil Nadu, India
4. Association For Community and Dialogue, Malaysia
5. British Tamil Conservatives, UK
6. British Tamil Forum, UK
7. Center for War Victims & Human Rights, Canada
8. Communist Party of India – Tamil Nadu Secretariat, India
9. Communist Party (M-L) People Liberation – Tamil Nadu,

10. Council of Temples, Malaysia
11. Dravida Munnetra Kazhagam – Tamil Nadu, India
12. Forum Against War Crimes and Genocide –
Tamil Nadu, India
13. Green Student Movement, Tamil Nadu, India
14. Group of Concerned Citizens, Malaysia
15. Hindu Defense Brigade, Malaysia
16. Ilankai Tamil Sangam, USA
17. International Council of Eelam Tamils (ICET)
18. ICET: Council of Eelam Tamils in Germany, Germany
19. ICET: Danish Federation of Tamil Associations, Denmark
20. ICET: Dutch Tamil Forum, Netherland
21. ICET: Italian Council of Eelam Tamils, Italy
22. ICET: Maison du Tamil Eelam France, France
23. ICET: National Council of Canadian Tamils, Canada
24. ICET: National council of New Zealand Tamils, New Zealand
25. ICET: Norwegian Council of Eelam Tamils, Norway
26. ICET: Swiss Council of Eelam Tamils, Switzerland
27. ICET: Tamil Cultural Centre- Belgium, Belgium
28. Malaysian Indian Youth Council, Malaysia
29. Malaysian Tamil Forum, Malaysia
30. Mouvement Against Tamils Genocide, Mauritius
31. Naam Thamilar Katchi, , Tamil Nadu, India
32. New Zealand Tamil Society, New Zealand
33. Norwegian Council of Eelam Tamils, Norway
34. Pasumai Thaayagam Foundation – , Tamil Nadu, India
35. Pattali Makkal Katchi -, Tamil Nadu, India
36. Penang Society for Advancement of Tamils, Malaysia
37. People for Equality and Relief in Lanka, USA
38. People’s Movement Against Nuclear Energy – Tamil Nadu, India
39. Southside FM Radio, South Africa
40. Students Federation For Free Eelam, Tamil Nadu, India
41. Students Movement For Change, Tamil Nadu, India
42. Students Struggle for Tamil Eelam – , Tamil Nadu, India
43. Swedish Tamils Forum, Sweden
44. Tamil Nadu Makkal Katchi – Tamil Nadu, India
45. Tamil Nadu Students Movement – Tamil Nadu, India
46. Tamil Renaissance Front, Malaysia
47. Tamil Agam Students Movement, Tamil Nadu, India
48. Tamilar Munnetra Padai, Tamil Nadu, India
49. Tamilar Vaazhvurimai Katchi, Tamilnaadu, India
50. Tamils Against Genocide UK, USA
51. Tamils Cultural Center – Tamil Nadu, India
52. Tamils For Labour, UK
53. Tamil Students Initiative, UK
54. Tamil Youth and Students Federation, Tamil Nadu, India
55. Thamizh Thesiya Periyakkam – Tamil Nadu, India
56. Thamizh Thesiya Viduthai Iyakkam – Tamil Nadu, India
57. Thamizhar Munnetrak Kazhagam – , Tamil Nadu, India
58. The Solidarity Group for Peace and Justice in Sri Lanka, South Africa
59. Thiravidar Viduthalai Kazhagam -, Tamil Nadu, India
60. Secretariat, Transnational Government of Tamil Eelam
61. United States Tamil Political Action Council, USA
62. World Thamil Organization, USA
63. Young Tamil Nadu Movement -, Tamil Nadu, India