செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு முதல் முறையாக ‘ஒளிரும் ஸ்டம்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் சேர்மன் ராஜீவ் சுக்லா நேற்று அளித்த பேட்டியில், ‘2014–ம் ஆண்டு முதல் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஒளிரும் ஸ்டம்புகள் (எல்.இ.டி. ஸ்டம்பு) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 9–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளிலும் முதல்முறையாக ஒளிரும் ஸ்டம்புகளை பயன்படுத்த உள்ளோம். உலக கோப்பை போட்டிகளுக்கு அந்த ஸ்டம்புகளை சப்ளை செய்த நிறுவனத்திடம் இருந்தே நாங்களும் அதை வாங்கியுள்ளோம்’ என்றார்.