செய்திகள்

ஐ.பி.எல்.: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை எளிதான வெற்றி- புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது

ஐ.பி.எல். தொடரின் இன்றைய முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் சென்னை- பஞ்சாப் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு பஞ்சாப் அணியின் ஓட்ட வேகத்தை கட்டுப்படுத்தினார்கள்.

131 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் மைக் ஹசி மெக்கல்லம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹசி 1 மெக்கல்லம் 6 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள் இதனால் சென்னை அணிக்கு சிறிய நெருக்கடி ஏற்பட்டது.ஆனால் அடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டு பிளிசிஸ்இ ரெய்னா சிறப்பாக விளையாடினார்கள். டு பிளிசிஸ் அரை சதம் அடித்து 55 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 92 ஓட்டங்களை குவித்தது.

அடுத்து ரெய்னாவுடன் தோனி களம் இறங்கினார். தோனி அதிரடியாக விளையாடி 16 பந்தில் தலா இரண்டு பவுண்டரி சிக்சர்கள் அடிக்க சென்னை அணி 16.5 ஓவரிலேயே 134 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரெய்னா 41 ஓட்டங்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இரு அணிகளும் தங்களுடைய லீக் போட்டியை முடித்துள்ள நிலையில் சென்னை அணி 14 லீக் போட்டிகளில் விளையாடி 9 வெற்றி 5 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று இந்த தொடரில் முதலிடத்தையும் பஞ்சாப் அணி 3 வெற்றிஇ 11 தோல்விகளுடன் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

ஐ.பி.எல்.: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை எளிதான வெற்றி- புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது