செய்திகள்

ஐ.பி.எல்.போட்டியில் காம்பீரே சிறந்த கேப்டன்: வாசிம்அக்ரம் சொல்கிறார்

2015 ஐபிஎல்லின் சிறந்த அணித்தலைவர் கல்கத்தாவின் கௌதம்கம்பீர் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான வாசிம்அக்ரம் தெரிவித்துள்ளார்.
வாசிம்அக்ரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
அர்ஜூன் தெண்டுல்கர் என்னிடம் அதிகமான கேள்விகளை கேட்டு விளக்கம் தெரிந்துகொண்டார். இடதுகை துடுப்பாட்ட வீரரான அவர் வேகமாக பந்துவீச விரும்புகிறார். அவருக்கு பல நுணுக்கங்கள் சொல்லி கொடுத்தேன்.
20 ஓவர் போட்டி என்றாலே அது துடுப்பாட்ட வீரர்களுக்கு உரியது தான். பந்துவீச்சாளர்களின் நிலை திண்டாட்டமே. சில நேரங்களில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான நிலை ஏற்படும்.
ஐ.பி.எல். இளம் வீரர்களை ஊக்குவிக்கிறது. கொல்கத்தா அணியின் வெற்றிகளுக்கு காம்பீரின் தலைமை முக்கியமானது. ஐ.பி.எல். போட்டிகளில் அவரே சிறந்த அணித்தலைவர் ஏனென்றால் விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் அவர் ஆர்வமாக உள்ளவர்.
உமேஷ்யாதவ் மார்னே மார்கல்இ ரஸ்சல் சுனில்நரீன் பியூஸ்சாவ்லா சகீப்–அல்–ஹசன் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் கொல்கத்தா அணியில் இருப்பதால் எனது பணி எளிதாக இருக்கிறது.
இந்த ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ஒவ்வொரு அணியும் சிறப்பாக ஆடுவதால் ருசிகரமாக உள்ளது. இதுவரை எந்த அணியும் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறவில்லை. புள்ளிகள் பட்டியலில் ஒவ்வொரு அணிக்கும் வாய்ப்பு நிலை தென்படுகிறது.
இவ்வாறு வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.