செய்திகள்

ஐ.மு.சு.கூ அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் : சுசில் பிரேமஜயந்த

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக போட்டியிட்டு தங்களின் அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி தங்கிடம் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த தெதரிவித்துள்ளார்.
பொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திதத  போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக சகல பங்காளிக் கட்சிகளையும்  இணைத்து போட்டியிட்ட அரசாங்காத்தை அமைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 20வது திருத்தத்தை அதரிக்கவும் மற்றும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை கொண்டுவரவுள்ளமை தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் எடுத்து கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.