செய்திகள்

ஐ.ம.சு.கூவின் அதிகாரத்தை கைப்பற்ற மஹிந்த அணி முயற்சி

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் அதிகமானவர்கள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் அதன் அதிகாரத்தை தாம் கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு அதற்கான காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதற்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையில் அவரை எப்படியாவது களமிறக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டமைப்பு அதிகாரத்தை கைப்பற்றி அவரை அதில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் விரைவில் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுவை கூட்டுமாறு தினேஷ் குணவர்தன ஐ.ம.சு.கூவின் செயலாளர் சுசில்பிரேமஜயந்தவுக்கு நேற்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.