செய்திகள்

ஐ.ம.சு.கூவின் எம்.பிக்கள் குழு கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை  தொடர்பாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பிக்களின் இணக்கப்பாட்டை அறிந்துக்கொள்ளும் வகையில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று காலை இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் குறித்த விடயங்கள் தொடர்பாக கூட்டமைப்பு எம்.பிக்களின்  நிலைப்பாட்டை ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
20வது திருத்தம் மற்றும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்  பாராளுமன்ற குழு இன்று ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ளது. இதன்போது இந்த விடயங்கள் தொடர்பாக எம்.பிக்களின் நிலைப்பாடுகளை கேட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.