செய்திகள்

ஐ.ம.சு.கூவின் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் அந்த கட்சிகளின் உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார்.
ஏதிர்வரும் 23ம் திகதி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவின் திறந்த வெளியரங்கில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டணி தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் , எதிர்வரும் தேர்தலுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது போன்ற விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதுடன் இந்த சந்திப்பில் உள்ளுராட்சி சபை முதல் பாராளுமன்றம் வரையான கூட்டணி உறுப்பினர்களும் மற்றும் கட்சிகளின் செயற்பாட்;டாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கூட்டணிக்குள் மைத்திரி அணி மற்றும் மஹிந்த அணியென தற்போது பல்வேறு கருத்து முறன்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது