செய்திகள்

ஐ.ம.சு.கூவின் பிரதமர் வேட்பாளர் சமல் ராஜபக்‌ஷ?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் சமல் ராஜபக்‌ஷ களமிறக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்குமிடையே நடைபெற்ற சந்திப்பின் போது சில கட்சியினர் மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டுமென யோசனையினை முன்வைத்துள்ள நிலையில் ஜனாதிபதி அதனை நிராகரித்துள்ளார்.

ஆனால் சமல் ராஜபக்‌ஷவை களமிறக்குவது தொடர்பாக யோசனைகள் முன்வைக்கப்பட்டபோது அதற்கு பதில் எதனையும் கூறாது ஜனாதிபதி சிரித்துக்கொண்டே வேறு விடயம் தொடர்பான கலந்துரையாடகு;கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.