செய்திகள்

ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் மஹிந்தவை சந்தித்தனர்

நேற்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக இன்று காலை கலந்துரராடியுள்ளனர்.

இதன்போது மஹிந்தவை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டுமென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அத்துடன் வேட்பு மனுக்களை தயாரிப்பது தொடர்பாகவும் அந்த சந்திப்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்‌ஷ தற்போது தங்கியிருக்கும் மீரிஹானவில் அமைந்துள்ள வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதுடன் இதில் தினேஷ் குணவர்தன , வாசுதேவ நாணயக்கார மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட முன்னாள் எம்.பிக்கள் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும் தனது முடிவு தொடர்பாக மஹிந்த இன்னும் அறிவிக்கவில்லையனெ தெரிவிக்கப்படுகின்றது.