செய்திகள்

ஐ.ம.சு.கூ பங்காளிக் கட்சிகள் இன்னும் 19க்கு ஆதரவில்லை: இன்றும் சிக்கல் வரும்?

19வது அரசியலமைப்ப திருத்தத்தை இன்றைய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன்  இது தொடர்பான விவாதத்தை இன்றும் நாளையும் நடத்தி இதனை நிறைவேற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் சில இதனை எதிர்க்கும் நோக்கத்தில் செயற்பட திட்டமிட்டுள்ளதாக தெரிய வருவதுடன் இதனால் அரசாங்கத்தின் இந்த திட்டம் நிறைவேறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தினேஷ் குணவர்தன , வாசுதேவ நாணயக்கார , விமல் வீரவன்ச உள்ளிட்ட எம்.பிக்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினுடைய பங்காளிக்கட்சிகள் சில அரசாங்கத்தின் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளாது தாமும் திருத்தங்களை முன்வைத்து அதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே அதனை ஆதரிக்க திட்டமிட்டுள்ளன. இதன்படி இன்று காலை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது அவர்களின் திருத்;தம் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவர்களின் திருத்தங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே இதன்படி 19வது திருத்தம் மீண்டும் குழப்பத்துக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்படுகனறது. எவ்வாறாயினும் 19ஐ இம்முறை பாராளுமன்றத்தில் நிறைவெற்றப்படுமென ஜனாதிபதி கட்சிகளிடமும் மக்களிடமும் வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.