செய்திகள்

ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளர் சுசில் இன்று மகிந்தவுடன் இணைவார்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரிய பிளவு ஒன்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க செய்தித்தாள் ஒன்று எதிர்வு கூறியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த இன்றையதினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அணியில் இணைந்துகொள்ளப்போவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாகவே சுசில் பிரேமஜயந்த வெளிநாடு ஒன்றுக்குச் சென்று விட்டார். அவர் இன்று நாடு திரும்புவார் என்று எதிர்ப்பாரக்கப்படுகின்றது. இதன்பின்னர் உடனடியாகவே அவர் மகிந்த ராஜபக்ஷவுக்கான பிரசாரங்களில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர் நிலையை வழங்குவதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பின்னடிப்பதே தற்போதைய நிலைமைக்கான காரணமாக உள்ளது.

இதேவேளை மகிந்த ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்டுள்ள 6 பேர் கொண்ட குழு இன்று மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.