செய்திகள்

ஐ.ம.சு.மு. பொதுத் தேர்தல் பிரச்சாரத்துக்கு தலைமை தாங்க மைத்திரிபால இணக்கம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதானமாகக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுத் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தலைமைதாங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்திருக்கின்றார். சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுவின் கூட்டத்தில் இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

சுதந்திக்கட்சியின் மத்திய குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அதில் கலந்துகொள்ளவில்லை. மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டிலுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களை யாருக்கும் விட்டுக்கொடுப்பதில்லை எனவும், கட்சிமாறும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.