செய்திகள்

ஒசாமாவின் காதல்: ஆப்பிள் போன்றவளே.. சொர்க்கத்திலும் என்னையே திருமணம் செய்துகொள் என மனைவியிடம் உருக்கம்..

அமெரிக்கா வெளியிட்டுள்ள அல்ஹைடா தலைவர் ஒசாமாவின் வீடியோ ஒன்றில் தன் மனைவியிடம் நீ ஆப்பிள் போன்றவள். சொர்க்கத்திலும் என்னையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிப்பதை காணமுடிந்துள்ளது.

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த போது அமெரிக்க அதிரடி படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 2011–ம் ஆண்டு இச்சம்பவம் நடந்தது. சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பின்லேடன் வீட்டில் இருந்த ஆவணங்களை அமெரிக்க அதிரடிப்படை பறிமுதல் செய்தது.

ஒசாமா தன்னுடைய மனைவி ஒருவருக்கு அனுப்பிய வீடியோ செய்தி ஒன்றை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் “ஆப்பிள் போன்றவளே.. நீ தான் என்னுடைய விலை மதிப்பற்ற செல்வம். என்னுடைய இறப்புக்கு பிறகு வேறு ஒருவரை நீ திருமணம் செய்து கொள்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் சொர்க்கத்தில் தீர்ப்பு நாளின்போது என்னையே திருமணம் செய்து கொள்ள தேர்ந்தேடுக்க வேண்டும். குழந்தைகளை கெட்டவர்களுடன் சேரவிடாமல் நன்றாக வளர்க்க வேண்டும். பெண் குழந்தைகளை போராளிகளுக்கோ அல்லது வேறு நல்ல மனிதர்களுக்கோ திருமணம் செய்து வை” என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் பயங்கரவாத செயல்களுக்காக மட்டும் நினைவு கூறப்படும் ஒசாமாவின் பொறுப்பான கணவனின் மறுபக்கம் வெளிப்பட்டுள்ளது.