செய்திகள்

ஒத்தி வைக்கப்பட்ட ரணில் – சஜித் சந்திப்பு

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே இன்று மாலை நடத்தப்படவிருந்த சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் அந்த சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச இன்றைய தினத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவுள்ளால் அவரால் அந்த சந்திப்பில் கலந்துக்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)