செய்திகள்

ஒன்றரை வயதுக் குழந்தையும் தாயும் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்பு

கிளிநொச்சி – பளை பகுதியில் ஒன்றரை வயது குழந்தையும் தாயும் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 10 மணியளவில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

ஒன்றரை வயதான ஆண் குழந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற பின்னர் குழந்தையின் தாய் அதே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 31 வயதான தாயொருவரே உயிரிழந்துள்ளார். குழந்தையின் தந்தை பிரதேச வைத்தியசாலையொன்றில் பணிபுரிவதாகவும் சம்பவத்தின் போதும் அவர் கடமையிலிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த குழந்தையினதும், தாயினதும் சடலங்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பிரேதப் பரிசோதனையின் பின்னரே இந்த மரங்கள் குறித்த விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. பளை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

R-06