செய்திகள்

ஒருநாள் போட்டிக்காக தோனி உட்பட 8 பேர் வங்காள தேசம் சென்றனர்

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி முடிந்துள்ள நிலையில் ஒருநாள் போட்டி நாளை மறுதினம் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக ஒருநாள் போட்டியின் கேப்டன் தோனி உள்பட 8 பேர் வங்காள சேதம் சென்றடைந்தனர்.

தோனியுடன் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஸ்டூவர்ட் பின்னி, அக்சார் பட்டேல், மோகித் சர்மா, தவால் குல்கர்னி மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் அணியுடன் இணைந்தனர்.
டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சிறப்பாக விளையாடியதால் ரவி சாஸ்திரி விருந்து அளித்தார். இதில் கலந்து கொண்ட பின்னர் ஒருநாள் போட்டியில் இடம்பெறாத இசாந்த் சர்மா, கர்ண் சர்மா, விருத்திமான் சஹா, வருண் ஆரோன், ஹர்பஜன் சிங், முரளி விஜய் மற்றும் புஜாரா ஆகியோர் இந்தியா வந்தடைந்தனர்.

18, 21 மற்றும் 24-ந்தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. அங்கு பருவமழை பெய்வதால் ஆட்டம் தடைபட்டால் அடுத்த நாள் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி வங்காள தேசத்துக்கு எதிராக 2-0 என தொடரை கைப்பற்றியிருந்தது. 3-வது போட்டி நடைபெறவில்லை.