செய்திகள்

ஒரு படத்தில் ஒரே பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய சுஜிபாலா

பசவா புரொடெக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ கமல்தீப் பிச்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பானு.’

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜி.வி.சீனு இயக்குகிறார். கே.அப்துல் ரஹ்மான் ஒளிப்பதிவு செய்ய, உதயராஜ் இசையமைக்கிறார். படத்தின் கதாநாயகர்களாக G.V.சீனு மற்றும் உதயராஜ் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக நந்தினிஸ்ரீ நடிக்கிறார்.

மேலும் ஜவஹர், கவிப்ரியா, நதிஷா, சுஜிபாலா மற்றும் கோவை செந்தில், சிசர் மனோகர், லொள்ளு சபா மனோகர், போண்டாமணி, குள்ளமணி, தினேஷ்மணி என ஒரு நகைச்சுவை பட்டாளமே நடித்திருக்கின்றனர்.

ஒரு நாத்திக இந்து வாலிபனுக்கும், முஸ்லீம் பெண்ணுக்கும் நடக்கும் காதல் போராட்டம்தான் இத்திரைப்படம். இதன் படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்றது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு குத்தாட்ட பாடலுக்கு சுஜிபாலா ஆடியுள்ளார்.

இப்படத்தின் பாடல்களை அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், சத்யன், லதா ராஜ்குமார் மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளரான உதயராஜ் ஆகியோர் பாடியுள்ளனர். அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்த நிலையிலுள்ள இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.