ஒரு போட்டியில் வென்றாலும் அயலாந்து அணி அடுத்த சுற்றிற்கு செல்லலாம்.
தென்னாபிரிக்காவுடன் சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்றதன் காரணமாக பாக்கிஸ்தானிற்கு அடுத்த சுற்றிற்கு செல்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளது. அயர்லாந்துடன் தோற்றதன் காரணமாக அந்த பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்ட இரண்டாவது அணியாக சிம்பாப்வே காணப்படுகின்றது.
மேற்கிந்திய அணியுடான வெற்றிகாரணமாக இந்தியா அடுத்த சுற்றிற்கு நுழைவது நிச்சயமாகியுள்ளது. மிகுதி இருக்கின்ற போட்டிகளில் ஓன்றில் வென்றாலும்( அயர்லாந், சிம்பாப்வே)இந்த பிரிவில் இந்தியா முதலாவதாக வரும் பாக்கிஸ்தானுடனான தோல்வி தென்னாபிரிக்காவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.அவர்கள் விளையாடுவதற்கு இன்னமும் ஓரு போட்டியுள்ளது-மேலும் அவர்களது உயர் ஓட்டவீதம் காரணமாக அவர்கள் நிச்சயமாக இரண்டாவது இடத்தை பிடிப்பார்கள்.
இதன் காரணமாக அடுத்த இரு இடங்கள் எந்த அணிக்கு என்பதில் மேற்கிந்திய தீவுகள், பாக்கிஸ்தான் மற்றும் அயர்லாந்திற்கு இடையில்கடும் போட்டி நிலவுகின்றது.
பாக்கிஸ்தான்- பாக்கிஸ்தான் இன்னமும் ஓரு போட்டியில் விளையாடவேண்டியுள்ளது.அயர்லாந்திற்கு எதிரான அந்த போட்டியில் அவர்கள் வெற்றிபெற்றால் அவர்கள் அடுத்த சுற்றிற்கு செல்லலாம்.தோற்றால் ஓட்ட வீதம் அவர்களது வாய்ப்பை தீர்மானிக்கும்.மேற்கிந்திய தீவுகளின் ஓட்ட விகிதத்துடன் அவர்கள் போட்டிபோடவேண்டிய நிலை உருவாகும்.
அயர்லாந்து- இந்த அணி விளையாடுவதற்கு இன்னமும் இரு போட்டிகள் உள்ளன- இந்தியாவுடனும், பாக்கிஸ்தானுடனும் இவர்கள் விளையாட வேண்டும்.ஓரு போட்டியில் வென்றாலும் அடுத்த சுற்றிற்கு செல்லலாம்.அவர்களின் ஓட்ட விகிதமே இந்த பிரிவில் மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது.இதன் காரணமாக இரண்டிலும் தோல்வியடைந்தால் அவர்கள் 2015 உலககிண்ணத்திலிருந்து வெளியேறுவார்கள்.
மேற்கிந்திய அணி- இந்த அணி அடுத்த சுற்றிற்கு செல்வது என்பது முற்றுமுழுதாக ஏனைய அணிகளிலேயே தங்கியுள்ளது.இவர்கள் ஐக்கிய அராபு இராச்சியத்தை பாரிய வித்தியாசத்தில் வெல்லவேண்டும்.அயர்லாந்து அணிஇந்தியாவை தோற்கடிக்கின்றது எனகருதினால்,பாக்கிஸ்தானும் அயர்லாந்திடம் தோற்றால் , மேற்கிந்திய , பாக்கிஸ்தான் அணிகளின் ஓட்ட விகிதத்தை பொறுத்தே மேற்கிந்திய அணியின் அடுத்த சுற்று வாய்ப்புகள் அமையும்.அயர்லாந்து அணி இரண்டு போட்டிகளிலும் தோற்றால் மேற்கிந்திய அணியின் ஓட்டவிகிதம் அந்த அணிக்கு உதவும்.இதற்கிடையில் இந்தியா அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் மழைகுறுக்கிட்டால் அல்லது சமநிலையில் முடிந்தால் பாக்கிஸ்தான் அயர்லாந்தை தோற்கடிக்கவேண்டியிருக்கும.