செய்திகள்

ஒரே ஆய்வு கூடத்தை திறந்து வைப்பத்தில் சர்ச்சை(படங்கள்)

ஆரம்ப பாடசாலைகள், இடைநிலை பாடசாலைகள் ஆகியவற்றை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கபெற்ற நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆய்வூகூடம் பல சர்ச்சைக்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்புடனும் மத்தியில் திறந்து வைக்கப்பட்டது.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம், கவரவில தமிழ் மகா வித்தியாலயம், லக்கம் தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இன்று காலை 09.00 மணிக்கு லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆய்வு கூடமும், 10.00 மணிக்கு கவரவில தமிழ் மகா வித்தியாலத்தின் ஆய்வு கூடமும், 11மணிக்கு நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆய்வு கூடமும் மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சர் எம்.ராம் தலைமையில் திறந்து வைக்கபட்டது.

இந் நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான  கணபதி கனகராஜ், பிலிப் குமார், முன்னால் அம்பகமுவ பிரதேசசபையின் தலைவர் வெள்ளையன் தினேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து மீண்டும் குறித்த ஆய்வு கூடகங்களை இராஜங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் காலை 10.00 மணிக்கு லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆய்வு கூடமும் பிற்பகல் 12.00 மணிக்கு கவரவில தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆய்வு கூடமும், பிற்பகல் 01.30 மணிக்கு நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆய்வு கூடமும் இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் திறந்து வைக்கபட்டது.

இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிஷ்ணன் தலைமையில் இடம் பெற்ற நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கான தொழில்நுட்ப ஆய்வு கூடத்தின் திறப்பு விழாவின் போது நோர்வூட் களதடுப்பு பொலிஸார் வரவளைக்கப்பட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினை மீண்டும் அமைச்சர் திறந்து வைத்தமை குறிப்பிடதக்கது.

இந்த சர்ச்சை விடயம் தொடர்பாக மத்திய மாகாண இந்து கலாசார மற்றும் விவசாய அமைச்சர் எம்.ராமிடம் நாம் வினாவிய போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்…

தற்போது மத்திய மாகாணத்தில் உள்ள குறிப்பிட்ட பாடசாலைகள் அனைத்தும் மத்திய மாகாண கல்வி அமைச்சின் பொறுப்பின் கீழே உள்ளது.

இக்கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர்கள் திறந்து வைக்க இருந்தபோதிலும் அவரின் வேலை பழு காரணமாக என்னை அவர் திறந்து வைக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

இதன் காரணமாகவே நான் இக்கட்டிடத்தை திறந்து வைக்கின்றேன்.

அத்தோடு இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் அவர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளளாமே தவிர அவர் ஆய்வு கூடத்தை திறந்து வைக்க முடியாது. ஆனால் அவர் அவர்களின் அரசியல் நாடகத்தினை அரங்கேற்றுவதற்காக பாடசாலைகளின் நிகழ்வுகளை பகடகாய்கலாக நினைத்து அரசியல் லாபம் தேடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

08.06.2015 அன்று காலையில் நான் கட்டிடத்தை திறந்து வைத்தாலும் மாலையில் அவர் கட்டிடத்தை திறந்து வைக்க இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். இவ்விடயம் அறுவருப்பை ஏற்படுத்துகின்றது.

எனவே பாடசாலைகளை அரசியலுக்காக பயன்படுத்தாமல் சிறந்த கல்விமான்களை உருவாக்கும் நிலையம் என கருதி செயற்பட வேண்டும் என்றார்.

இந்த சர்ச்சை விடயம் தொடர்பாக இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணணிடம் நாம் வினாவிய போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்…

நான் இந்த ஆய்வு கூடத்தை திறந்து வைப்பதற்கு முன் இன்னொரு குழு ஒன்று எனக்கு முன்னால் வந்து திறந்து வைத்து சென்றுள்ளது. எனினும் பாடசாலைகளில் இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுப்படுவது நல்ல செயல் அல்ல. அரசியலை பாடசாலைக்குள் கொண்டு வரக்கூடாது.

ஆய்வு கூட வேலைத்திட்டம் கல்வி அமைச்சுக்கு சொந்தம் எனவூம் அதனை பார்வையிடுவதற்கும், திறப்பதற்கும் தானுக்கு அதிகாரம் இருப்பதாகவூம் இவ்வாறான திறப்பு விழாவில் பாடசாலையில் அரசியல் செய்வதை தான் எவ்விதத்திலும் அனுமதிக்க மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

DSC00014 DSC00021 DSC00023 DSC00029 DSC00036 DSC00053 DSC09339 DSC09360 DSC09362 DSC09365 DSC09379 DSC09383 DSC09384 DSC09393 DSC09398 DSC09410 DSC09418 vlcsnap-2015-06-08-17h03m01s102